மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை + "||" + School Teacher Suicide by hanging

பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு பென்ஷனர் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர், அண்ணாசாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி காயத்ரி(29). இவர், கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு யுவஸ்ரீ(7)என்ற மகள் இருக்கிறார்.


ஆசிரியை காயத்ரி, தன்னுடன் சக ஆசிரியர்கள் சரியாக பேசுவது இல்லை. கிண்டல் செய்கிறார்கள் என தனது கணவர் மற்றும் தாயிடம் கூறி வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த காயத்ரி, குளியல் அறைக்கு சென்று பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் தடுத்து சமாதானம் செய்தனர். ஆனாலும் மனம் உடைந்த காயத்ரி, அன்று இரவே தனது வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணா, காயத்ரியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், காயத்ரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரி வேலை செய்த தனியார் பள்ளியில் யாரேனும் அவரிடம் தவறாக நடந்து கொண்டார்களா? அல்லது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. சங்கரன்கோவிலில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
சங்கரன்கோவிலில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
3. துறையூர் அருகே வனப்பகுதியில், பள்ளி ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன்
துறையூர் அருகே பள்ளி ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவனை கைது செய்யக்கோரி போலீஸ்நிலையத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கோயம்பேட்டில் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.