மாவட்ட செய்திகள்

கோவை காந்தி பார்க் பகுதியில் ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார் + "||" + Updated Park Minister SP Velumani inaugurated the function

கோவை காந்தி பார்க் பகுதியில் ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்

கோவை காந்தி பார்க் பகுதியில் ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்
கோவை காந்திபார்க்பகுதியில்ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை அமைச்சர்எஸ்.பி.வேலுமணிதிறந்து வைத்தார்.
கோவை,

கோவை காந்திபார்க்பகுதியில்காந்தி பூங்காஉள்ளது.இந்த பூங்காவைபுதுப்பித்து நவீனப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படிரூ.3¼ கோடியில் புதுப்பிக்கும் பணி நடந்தது. அங்கு சிறிய அளவிலான செயற்கை மலை, அருவி, சிறிய வகை நீரூற்றுகள், சிறுவர்விளையாட்டு திடல், 750மீட்டர் சுற்றளவுகொண்ட நடைபாதை,மூலிகை தோட்டம், சுவர் ஓவியம்,யோகா பயிற்சிமையம், பூந்தோட்டம், அலங்கார வளைவுகள், முதியோர்களின் ஓய்விடம், விலங்குகளின் பொம்மைகள், திறந்த வெளி நிகழ்ச்சி அரங்கம் உள்பட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டன.

அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர்ராஜாமணி தலைமைதாங்கினார். மாநகராட்சி தனி அதிகாரிஷ்ரவன்குமார்ஜடாவத், துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்எஸ்.பி.வேலுமணிகலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்டபூங்காவை திறந்துவைத்ததுடன், அங்கு அமைக்கப்பட்டு உள்ளவசதிகளை பார்வையிட்டார். அத்துடன் அங்குள்ள யோகா மையத்தில் அமர்ந்து சிறிது நேரம்யோகவும்செய்தார். பின்னர் அமைச்சர்எஸ்.பி.வேலுமணிபேசும்போது கூறியதாவது:-

இந்த பகுதியில்உள்ள பொதுமக்களின்வசதிக்காகஇந்த பூங்காபுனரமைக்கப்பட்டு, தற்போது திறந்து வைக்கப்பட்டு உள்ளது.இந்த பூங்கா100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இங்குள்ள நீச்சல் குளம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.அதை பொதுமக்கள், மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கோவை மாநகராட்சியின்வளர்ச்சிக்காக சாலைகள், மேம்பாலங்கள்,பாதாள சாக்கடைவசதி,எல்.இ.டி.விளக்குகள், பூங்காக்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் உக்கடம் பெரியகுளத்தில் நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடியமேம்பாட்டு பணிகள்நடந்து வருகின்றன.இந்த பணிகள்அனைத்தும் 6 மாதங்களுக்குள் முடிந்து விடும். அதன் பின்னர் பொதுமக்களின்பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்படும்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்50ஆண்டுகாலகனவு திட்டம்ஆகும்.இந்த திட்டம்முழுக்க முழுக்க மாநில நிதி ஆதாரம் மூலம் ரூ.1,682கோடி திட்டத்துக்குஒப்பந்தம்வழங்கி பணிதொடங்கப்பட்டு உள்ளது. கோவை-அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் சிக்னல் முதல் விமான நிலையம் வரை 9½ கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் அமைக்க திட்டஅறிக்கை தயாராகிவிட்டது. அதுபோன்று தொண்டாமுத்தூர் தொகுதியில் சிட்கோ அமைக்க உள்ளோம்.லாலிரோட்டில் போக்குவரத்துநெரிசலை தடுக்கமேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர இன்னும் கோவை மக்களுக்கு பல்வேறுநலத்திட்டங்களை செயல்படுத்தஉள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில்ஏ.கே.செல்வராஜ் எம்.பி.,கோவைமாநகர போலீஸ்கமிஷனர்சுமித் சரண், துணை ஆணையாளர்பாலாஜி சரவணன்,மாநகர பொறியாளர்லட்சுமணன், அ.தி.மு.க. மாவட்டஎம்.ஜி.ஆர்.இளைஞர்அணி செயலாளர்என்ஜினீயர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவை அருகே, இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
கோவை அருகே உள்ள அகதிகள் முகாமில் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
2. கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 1000 பேருக்கு முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் 1000 பேருக்கு முழு உடல் பாதுகாப்பு கவச உடைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
3. ஊரடங்கு காலத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும் - மத்திய மந்திரியிடம் காணொலி காட்சி மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
ஊரடங்கு காலத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் காணொலி காட்சி மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.
4. கோவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க வசதியாக ரூ.1 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
5. இன்று முதல் வீடு, வீடாக கொரோனா தொற்று ஆய்வு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 90 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.