மாவட்ட செய்திகள்

சிங்கம்புணரி, தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி ஆய்வு + "||" + At Singambunari, Devakottai Minister Velumani inspects development projects

சிங்கம்புணரி, தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி ஆய்வு

சிங்கம்புணரி, தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி ஆய்வு
சிங்கம்புணரி, தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி ஆய்வு செய்தார்.
தேவகோட்டை,

சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியான சிங்கம் புணரிக்கு வந்த அமைச்சர் வேலுமணிக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வாசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சரிடம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் பதிப்படைவதாகவும், சிங்கம்புணரி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.


இதுகுறித்து அமைச்சர் வேலுமணி கூறுகையில், விரைவில் பேரூராட்சி செயல் அலுவலர் பணியமர்த்தப்படுவார் என்றும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் இடம் ஒதுக்கப்படும் போது அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும். காசிப்பிள்ளை நகர் மற்றும் சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறையை குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் ராஜ்மோகன், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் திருவாசகம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சரவணன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் லட்சுமி பிரியா ஜெயந்தன், மாணவரணி மாவட்ட இணை செயலாளர் சதீஸ் சீலன், மாவட்ட மீனவர் அணி தலைவர் ஜெகன், அவைத்தலைவர் தவமணி, பேரூர் கழக செயலாளர்கள் குணசேகரன், பாண்டி, செல்வம், சதீஷ்குமார் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தேவகோட்டை பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்பு தேவகோட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தேவகோட்டை ராம்நகரில் உள்ள மின் மயான பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளது. அதை 15 நாட்களுக்குள் திறக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதே போல் தேவகோட்டையில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் மின் இணைப்பு பெற்று, குடிநீர் வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பிஆர்.செந்தில்நாதன், முன்னாள் தேவகோட்டை யூனியன் சேர்மன் பிர்லா கணேசன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிங்கம்புணரி பகுதியில் ஊரடங்கை பொருட்படுத்தாத மக்கள்
சிங்கம்புணரி பகுதியில் நாளுக்கு நாள் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2. சிங்கம்புணரியில் கொரோனாவால் முடங்கிய பொரி தொழில்
சிங்கம்புணரியில் கொரோனா காரணமாக பொரி தயாரிக்கும் தொழில் முடங்கியது.
3. சிங்கம்புணரியில் அ.தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு
சிங்கம்புணரியில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முக கவசம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.