தூத்துக்குடியில் பெரியார் பிறந்தநாள் விழா: உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடியில் பெரியார் பிறந்தநாளையொட்டி உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் பெரியாரடியான் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலம் பாளையங்கோட்டை ரோடு, டபிள்யூ.ஜி.சி ரோடு வழியாக பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. ஊர்வலத்தில் திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாவட்ட தலைவர் காதர்மைதீன் தலைமையில் கட்சியினர் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story