வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை இ-சேவை மையத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை இ-சேவை மையத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 17 Sep 2019 9:30 PM GMT (Updated: 17 Sep 2019 8:13 PM GMT)

வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் வாக்காளர் விவரங்களை சரிபார்த்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி தூத்துக்குடி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நிகழ்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர், வயது, பாலினம், பிறந்த நாள், கணவர் அல்லது தந்தை பெயர், புகைப்படம் ஆகியவற்றில் உள்ள பிழைகள் ஏதும் இருந்தால் வாக்காளர்கள் தாங்களாகவே www.NSPV.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

மேலும், வாக்காளர் உதவி மையம் என்ற செல்போன் செயலி மூலம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை செல்போன் மூலமாக பதிவு செய்யலாம். மேலும், 1950 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாகவும் தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகம், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், அனைத்து தாலுகாக்களில் உள்ள இ-சேவை மையத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து செம்மையான வாக்காளர் பட்டியல் வெளியிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளார் (பொது) (பொறுப்பு) அமுதா, தேர்தல் தனி தாசில்தார் நம்பிராஜன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story