மாவட்ட செய்திகள்

பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை + "||" + Political parties pay homage to Periyar statue on birthday

பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை

பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை
திண்டுக்கல், நிலக்கோட்டையில் பெரியார் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திண்டுக்கல்,

திண்டுக்கல்லில், பெரியாரின் 141-வது பிறந்த நாளையொட்டி, தி.மு.க., ம.தி.மு.க., திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பெரியார் முகமூடி அணிந்து குமரன் பூங்காவில் இருந்து பெரியார் சிலைக்கு ஊர்வலமாக வந்தனர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் ஜெயன், நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், திராவிட கழக மாவட்ட தலைவர் வீரபாண்டி, தந்தை பெரியார் தி.க. மாவட்ட தலைவர் சம்பத், ம.தி.மு.க. சார்பில் செல்வேந்திரன், தியாகு, தேசிய ஒருமைப்பாட்டு மாநில தலைவர் அப்துல் ஜபார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


நிலக்கோட்டை

நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில், பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத்தொடர்ந்து நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்ற திராவிடர் கழகத்தினர் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் போதுராஜன், நகர செயலாளர் திருப்பதி, மக்கள் விடுதலை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் சக்திசரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேடசந்தூர், வத்தலக்குண்டு

வேடசந்தூரில் தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் நிறுவன தலைவர் பகவத்சிங் பழனிச்சாமி தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் பாலமுருகன், மாவட்ட துணைப்பொதுச்செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல திராவிடர் கழகம், திராவிட இயக்கம், தமிழர்பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

வத்தலக்குண்டு அருகே உச்சப்பட்டி சமத்துவபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் தலைமையிலான நிர்வாகிகள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் நிர்வாகிகள் விஜயகுமார், தமிழ்மாறன், வளவன், தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க நவீன எந்திரம்
காந்தி பிறந்ததினத்தையொட்டி கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் வகையிலான நவீன எந்திரம் பயணிகளின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டது.
2. காந்தி உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா மரியாதை கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்
அரியலூரில் காந்தி பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர் கல்லங்குறிச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
3. பிறந்த நாளையொட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
4. பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரம்பலூரில் தி.மு.க. மற்றும் திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ேநற்று கொண்டாடப்பட்டது.
5. பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...