திருப்பூரில் தனியார் கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது - 2 கார், 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


திருப்பூரில் தனியார் கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது - 2 கார், 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Sept 2019 3:30 AM IST (Updated: 18 Sept 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தனியார் கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். 2 கார், 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம்புதூரில் இருந்து 15 வேலம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள தனியார் கிளப்பில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள்.

போலீசாரை கண்டதும் சூதாட்ட கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன் றது. ஆனால் போலீசார் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் சோளிபாளையம் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சரவணக்குமார் (வயது 34) உள்பட 12 பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 12 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ.1 லட்சம் மற்றும் 2 கார், 10 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 12 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் கிளப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story