காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:00 AM IST (Updated: 19 Sept 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரிமளம் எட்டாம் மண்டகபடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரிமளம்,

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரிமளம் எட்டாம் மண்டகபடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராம.சுப்புராம் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தலைவர் தர்ம.தங்கவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசின் மோசமான நிர்வாகத்தை மக்களுக்கு எடுத்து கூறியதால் ப.சிதம் பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அரசியல் பழி வாங்கும் நோக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் அர்ஜூன், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்ததை கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் தங்கவேலு, முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் தமிழ்செல்வன், பொது செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story