இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யலாம் - நமச்சிவாயம் அறிவிப்பு


இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யலாம் - நமச்சிவாயம் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2019 10:30 PM GMT (Updated: 22 Sep 2019 8:28 PM GMT)

காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி நடைபெற உள்ளது. காமராஜ் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளரை தேர்வு செய்ய ஏதுவாக இன்று (திங்கட்கிழமை) வைசியாள் வீதியில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்பமனு பெற்றுக்கொள்ளப்படுகிறது. விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு ஆண்களுக்கு ரூ.10 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

விருப்ப மனு விண்ணப்பம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிடைக்கும். விருப்பமனுவை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ் ஆகியோரிடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற பிரதேச காங்கிரஸ் பேரியக்க உறுப்பினர்கள் மட்டுமே மேலே குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுக்குமாறு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

Next Story