குடிபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்ட அ.தி.மு.க. பிரமுகர் கைது


குடிபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்ட அ.தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2019 11:30 PM GMT (Updated: 23 Sep 2019 7:26 PM GMT)

குடிபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்டு கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க.பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

தேவதானப்பட்டி, 

வத்தலக்குண்டு-பெரியகுளம் மெயின்ரோட்டில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்தநிலையில் தேவதானப்பட்டி வீருநாகம்மாள் கோவில் அருகே குடிபோதையில் 2 பேர் நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. வாகனங்களில் வந்தவர்கள் அவர்கள் மீது மோதாமல் இருக்க வளைந்து சென்றனர்.

இதனால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் நிலை ஏற்பட்டது. எனவே வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் கண்டித்தனர். அப்போது அவர்கள் அந்த வழியாக சென்றவர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதை வாகனங்களில் சென்ற சிலர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர்.

இதுதொடர்பாக தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நடுரோட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டவர்கள் தேவதானப்பட்டி பேரூராட்சி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பெருமாள் (வயது 55) மற்றும் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் (30) என தெரியவந்தது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக குடிபோதையில் நடுரோட்டில் அமர்ந்திருந்த அவர்களை அப்புறப்படுத்த முயன்ற தங்கேஸ்வரன் என்பவரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இது குறித்து தங்கேஸ்வரன் தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்். சுரேசை தேடி வருகின்றனர்.

Next Story