மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவர்களுக்கு விருது - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி,
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்க உள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் பயிற்சி மற்றும் கல்வி போதனை செய்தமைக்கான சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த ஆரம்ப பயிற்சி மைய ஆசிரியர் விருது, சேவை புரிந்த சமூகப் பணியாளருக்கான விருது, மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய தமிழக அரசின் சிறந்த நிறுவனத்துக்கான விருது உள்பட 8 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
எனவே, தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் விருது பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story