பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை வாலிபர்கள் 3 பேர் விடுதலை
பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை வாலிபர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
வேதாரண்யம்,
கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி ‘கியூ’ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் மற்றும் போலீசார் வேதாரண்யம் கடற்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு படகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த முகமதுரியாஸ் (வயது23), முகமதுரஜீஸ் (33), கிளிநொச்சியை சேர்ந்த வசீகரன் (20) ஆகியோர் என்பதும், வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்வதற்காக படகில் வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லை.
விடுதலை
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 2½ மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த நிலையில் 3 பேரையும் சென்னை ஐகோர்ட்டு இலவச சட்ட முகாம் நீதிபதி ஜெயந்தி விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் இலங்கையில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் வேதாரண்யத்துக்கு படகில் வந்ததாக கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட இலங்கை முல்லைதீவு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரும், விடுதலை செய்யப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story