குமரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏராளமான மக்கள் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. ஏற்கனவே பெண் குழந்தை உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வந்த மேலும் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது அஞ்சுகிராமத்தை சேர்ந்த 30 வயதுடையவர், கருங்கலை சேர்ந்த 20 வயதுடையவர் உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
டெங்கு வார்டில் அனுமதி
இதனையடுத்து 3 பேரையும் டாக்டர்கள் டெங்கு வார்டில் அனுமதித்தனர். தற்போது டெங்கு வார்டில் மொத்தம் 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் 5 பேருமே நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதே போல் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பலர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். வீட்டின் அருகே சிரட்டை, காலி பாட்டில்கள் மற்றும் டயர்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளும்படியும், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனே ஆஸ்பத்திரியை அணுகும்படியும் கூறி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Tags :
Next Story