மேட்டூர் அணை நீர்மட்டம் 119.24 அடியாக குறைந்தது
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.24 அடியாக குறைந்தது.
மேட்டூர்,
தமிழக மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த 30-ந்தேதி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 72 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரத்து 553 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 334 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நீர்மட்டம் குறைந்தது
அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளதால் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் 119.24 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 334 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாய் மற்றும் டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 12 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story