இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் 9 பேர் போட்டி


இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் 9 பேர் போட்டி
x
தினத்தந்தி 3 Oct 2019 10:30 PM GMT (Updated: 3 Oct 2019 8:29 PM GMT)

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 9 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி, 

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந்தேதி தொடங்கி 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதில் ஒட்டுமொத்தமாக 12 வேட்பாளர்கள் 18 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூர் முன்னிலையில் கடந்த 1-ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது.

இதில் 11 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வாபஸ் பெற கடைசி நாளான நேற்று சுயேச்சை வேட்பாளர்களான தேவிகா, செண்பகவல்லி ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனர். அதன்பின்னர் 9 பேர் தற்போது களத்தில் உள்ளனர்.

நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அவர் களுக்குரிய சின்னங்களுடன் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

1.ஜான்குமார் (காங்கிரஸ்) - கை

2.புவனேஸ்வரன் (என்.ஆர்.காங்.) - ஜக்கு (குவளை)

3.பார்த்தசாரதி (மக்கள் விடுதலை கட்சி)- படகோட்டியுடன் கூடிய பாய்மர படகு

4.கோவிந்தராஜ் (அகில இந்திய மக்கள் கழகம்) - வாளி

5.பிரவீனா (நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி

6.வெற்றிச்செல்வம் (மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்) - ஆட்டோ ரிக்‌ஷா

7.லெனின்துரை (சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா) - டார்ச் லைட்

8.சகாயராஜ் (சுயேச்சை) - ஊதல் (விசில்)

9.சுகுமாறன் (சுயேச்சை) - பிரஷர் குக்கர்

Next Story