கோவை அரசு ஆஸ்பத்திரியில், டெங்கு காய்ச்சலால் பாதித்த 11 பேருக்கு தீவிர சிகிச்சை - வைரஸ் காய்ச்சலுக்கு 52 போ் அனுமதி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைரஸ் காய்ச்சலுக்கு 52 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனா்.
கோவை,
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவியது. இதனால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதையடுத்து டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல்களை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் டெங்கு, பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு குறைந்தது.
இந்த நிலையில் கோவை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதைதொடர்ந்து தற்போது கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் என மொத்தம் 11 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அத்துடன் வைரஸ் காய்ச்சலுக்கு 52 போ் சோ்க்கப்பட்டு உள்ளனர். இவர்களை டாக்டர்கள் தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்குவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்த வேண்டும் என்று ெபாது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story