இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்தபோது மோட்டார்சைக்கிள்கள் மோதலில் பாதிரியார் பலி
போளூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பாதிரியார் பலியானார். மற்றொரு பாதிரியார் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
போளூர்,
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை சின்னவீரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. பாதிரியார். இவர் இறந்துவிட்டார். இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த பாதிரியார்களான ரமேஷ் (வயது 34), வீரப்பன் (33) ஆகியோர் மோட்டார்சைக்கிளில் சென்றனர். வீரப்பன் மோட்டார்சைக்கிளை ஓட்டினார். ரமேஷ், வீரப்பன் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
ஜமுனாமரத்தூரை அடுத்த கானகநேரி அருகே சென்றபோது எதிரே வீரப்பனூரை சேர்ந்த குமார் (45) என்பவர் வந்த மோட்டார்சைக்கிளும் இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் சம்பவஇடத்திலேயே இறந்தார்.
Related Tags :
Next Story