மாவட்ட செய்திகள்

மதுபோதையில் நடந்த தகராறு: வாலிபர் கல்லால் தாக்கி கொலை; நண்பர்கள் 3 பேர் கைது + "||" + Under the influence of over liquor: The murder of the plaintiff; 3 friends Arrested

மதுபோதையில் நடந்த தகராறு: வாலிபர் கல்லால் தாக்கி கொலை; நண்பர்கள் 3 பேர் கைது

மதுபோதையில் நடந்த தகராறு: வாலிபர் கல்லால் தாக்கி கொலை; நண்பர்கள் 3 பேர் கைது
சிவகாசியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி,

சிவகாசியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள எஸ்.புதுப்பட்டியை சேர்ந்த காளிச்சாமி மகன் நமகோடீஸ்வரன் (வயது 22). இவர் தனது நண்பர்கள் முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த ராமர் (22), மூர்த்தி (25) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு முத்துராமலிங்கபுரம் காலனியில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது போதையில் இருந்த நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதில் ஆத்திரம் அடைந்த ராமர், வாலிபர் நமகோடீஸ்வரனை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மூர்த்தி பீர்பாட்டிலால், நமகோடீஸ்வரனை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த நமகோடீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராமர், மூர்த்தி, மாரீஸ்வரன் உள்பட 7 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணையின் முடிவில் ராமர், மூர்த்தி, மாரீஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
நியூசிலாந்தை சேர்ந்த இளம்பெண் கேட்டி கிறிஸ்டினா ராகிச் (வயது 27). இவரது இளைய சகோதரி சிங்கப்பூரில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரை பார்ப்பதற்காக கேட்டி கிறிஸ்டினா ராகிச் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூர் சென்றார்.
2. திருப்புவனம் அருகே வாலிபர் வெட்டி கொலை
திருப்புவனம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
3. ஸ்கூட்டரில் தனியாக சென்ற பெண்ணிடம், மதுபோதையில் ஆபாசமாக பேசிய போலீஸ்காரர் பணிஇடை நீக்கம்
ஸ்கூட்டரில் தனியாக சென்ற பெண்ணிடம் மதுபோதையில் ஆபாசமாக பேசிய போலீஸ்காரரை பணி இடைநீக்கம் செய்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார்.
4. அரக்கோணம் அருகே, கை, கால்களை கட்டி வாலிபர் கொலை - ஏரியில் பிணத்தை புதைத்து விட்டு ஓடியவர்களுக்கு வலைவீச்சு
அரக்கோணம் அருகே கை, கால்களை கட்டி வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை ஏரியில் புதைத்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. கடலூரில், மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
கடலூரில் மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.