தோவாளையில் நள்ளிரவில் விபத்து தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் சாவு


தோவாளையில் நள்ளிரவில் விபத்து தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 13 Oct 2019 3:45 AM IST (Updated: 13 Oct 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

தோவாளையில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் அருகே தோவாளையில் உள்ள தேசிய நெடுஞ்சாைலயில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த நிைலயில் நேற்று இரவு 11.30 மணி அளவில் நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக சென்றனர். அங்குள்ள வளைவில் திரும்ப முயன்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடியது. இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தோடியது.

இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேேய 2 பேரும் பாிதாபமாக இறந்தனர். அதைத் தொடர்ந்து 2 ேபரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

விபத்தில் பலியானவர்களில் ஒருவர் பார்வதிபுரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த லெட்சுமணன் (வயது 25) என்று தெரியவந்தது. ஆனால் பலியான மற்றொருவர் யார்? எந்த ஊரை சோ்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story