கோவை கோட்டத்தில் இருந்து தீபாவளிக்கு 3 ஆயிரம்சிறப்பு பஸ்கள்


கோவை கோட்டத்தில் இருந்து தீபாவளிக்கு 3 ஆயிரம்சிறப்பு பஸ்கள்
x
தினத்தந்தி 15 Oct 2019 3:30 AM IST (Updated: 15 Oct 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

கோவை கோட்டத்தில் இருந்து தீபாவளிக்கு 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக கோவை கோட்ட போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை,

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

வருகிற 24-ந் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு 6, மதுரைக்கு 53, திருச்சிக்கு 41, தேனிக்கு 21, சேலத்துக்கு 37, ஊட்டியில் இருந்து சென்னைக்கு 2 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

25-ந் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு 6, மதுரைக்கு 133, திருச்சிக்கு 76, தேனிக்கு 51, சேலத்துக்கு 57, ஊட்டியில் இருந்து சென்னைக்கு 2 சிறப்பு பஸ்களும், 26-ந் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு 3, மதுரைக்கு 153, திருச்சிக்கு 88, தேனிக்கு 61, சேலத்துக்கு 62 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.27-ந் தேதி தீபாவளி தினத்தன்று கோவையில் இருந்து மதுரைக்கு 28, திருச்சிக்கு 27, தேனிக்கு 11, சேலத்துக்கு 12, ஊட்டியில் இருந்து சென்னைக்கு ஒரு சிறப்பு பஸ்களும், 28-ந் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு 6, மதுரைக்கு 48, திருச்சிக்கு 41, தேனிக்கு 16, சேலத்துக்கு 27, ஊட்டியிலிருந்து சென்னைக்கு 2 சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.

29-ந் தேதி கோவையிலிருந்து சென்னைக்கு 6, மதுரைக்கு 48, திருச்சிக்கு 41, தேனிக்கு 16, சேலத்துக்கு 27, ஊட்டியில் இருந்து சென்னைக்கு 2 சிறப்பு பஸ்களும், 30-ந் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு 3, மதுரைக்கு 28, திருச்சிக்கு 27, தேனிக்கு 11, சேலத்துக்கு 22, ஊட்டியிலிருந்து சென்னைக்கு ஒரு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இதேபோல திருப்பூர், ஈரோட்டில் இருந்தும் சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. பயணிகளின் கூட்டம் மற்றும் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை தயார் நிலையில் வைத்து இயக்கிட அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தி சிறப்பு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story