மாதாந்திர விளையாட்டு போட்டி 702 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தஞ்சை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜூலை மாதத்துக்கான விளையாட்டு போட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜூலை மாதத்துக்கான விளையாட்டு போட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. போட்டிகள் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் தடகளம், வாலிபால், ஹாக்கி மற்றும் நீச்சல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) தேன்மதி தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா வரவேற்றார்.
இதில் தடகள விளையாட்டில் 160 மாணவர்களும், 130 மாணவிகளும், வாலிபால் போட்டியில் 10 ஆண்கள் அணியும், 5 பெண்கள் அணியும் (180 பேர்), ஹாக்கி போட்டியில் 6 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியும் (160 பேர்) நீச்சல் போட்டியில் 50 மாணவர்கள், 22 மாணவிகள் என மொத்தம் 702 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் தஞ்சை மாவட்ட விளையாட்டு பிரிவு பயிற்றுனர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முடிவில் மாவட்ட ஹாக்கி பயிற்றுனர் அன்பழகன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story