மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு + "||" + District level monthly sports competitions with over 700 participants

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.

போட்டிைய பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு, மாணவிகள் விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயகுமாரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.


தடகள போட்டியில் 100, 400, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும், நீச்சல் போட்டிகளில் பிரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பிரஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர் பிளை ஸ்ட்ரோக் உள்பட 5 பிரிவுகளிலும், குழுப்போட்டிகளில் வாலிபால், கபடி ஆகியவை யும் நடந்தது.

700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

விளையாட்டு போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என 700-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தடகள போட்டிகள், நீச்சல் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும், குழுப்போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பையும், வீரர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தடகள போட்டிகளின் மாவட்ட பயிற்சியாளர் கோகிலா மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் 1,200 மாணவிகள் பங்கேற்பு
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டம் நல்லானூரில் நேற்று தொடங்கியது. இதில் 1200 மாணவிகள் பங்கேற்றனர்.
2. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கான குழு போட்டிகள்
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
3. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
4. நாகர்கோவிலில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி
நாகர்கோவிலில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது.
5. பள்ளி கல்வித்துறை சார்பில் சேலத்தில் மாநில கலைவிழா போட்டிகள்
பள்ளி கல்வித்துறை சார்பில் சேலத்தில் மாநில அளவிலான கலைவிழா போட்டிகள் நடைபெற்றது.