இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2019 3:45 AM IST (Updated: 24 Oct 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கள்ளக்குறிச்சி,

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதையடுத்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் அ.தி.மு.க.நகர செயலாளர் பாபு தலைமையில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இதில் மாவட்ட மருத்துவர் அணி பொருளாளர் டாக்டர்.குமரேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர்கள் ரங்கன், செல்வராஜ், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி மாவட்ட பொருளாளர் குபேந்திரன், மாவட்ட நிர்வாகி ரவி, நகர அவைத்தலைவர் சர்புதீன், நகர துணைச்செயலாளர் புண்ணியமூர்த்தி, வார்டு செயலாளர் சீனிவாசன், முன்னாள் மீனவர் அணி செயலாளர் குப்புசாமி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் முருகன், குட்டி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சின்னசேலம் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணை செயலாளர் சந்திரன், நிலவள வங்கி தலைவர் அருள்முருகன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கணேசன், இயக்குனர் அய்யந்துரை மற்றும் ஒன்றிய நகர, நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றதையொட்டி ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். அப்போது நிர்வாகிகள் ஆசிரியர் ரங்கநாதன், பன்னீர், செந்தமிழ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சீனு, பூபாலன், சீனுவாசன், ஜெகதீசன், முருகானந்தம், சிவசந்திரன், ராஜாராமன்.அரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story