டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கலெக்டர் ரத்னா வழங்கினார்


டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கலெக்டர் ரத்னா வழங்கினார்
x
தினத்தந்தி 26 Oct 2019 10:30 PM GMT (Updated: 26 Oct 2019 7:55 PM GMT)

அரியலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அரியலூர்,

தமிழக முதல்- அமைச்சரின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் மற்றும் செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளுக்கு கலெக்டர் ரத்னா நேரில் சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதையும், வீடு வீடாகவும், திறந்த வெளிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் வழங்கினார்.

ஆய்வின்போது, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த்காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, டாக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story