மாவட்ட செய்திகள்

குழித்துறை அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு ரூ.25 ஆயிரம் மதுபாட்டில்கள் நாசம் + "||" + Fire at a task shop near the pit Rs. 25 Thousand Liquors

குழித்துறை அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு ரூ.25 ஆயிரம் மதுபாட்டில்கள் நாசம்

குழித்துறை அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு ரூ.25 ஆயிரம் மதுபாட்டில்கள் நாசம்
குழித்துறை அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது.
களியக்காவிளை,

குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசாரும், கடையின் ஊழியர்களும் விரைந்து வந்தனர்.


ஊழியர்கள் கடையை திறந்து பார்த்தபோது அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும், போலீசார் கடையை ஆய்வு செய்தனர். அப்போது, கடையின் ‌ஷட்டரின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கடைக்கு தீ வைத்தது தெரியவந்தது.

இதுபற்றி டாஸ்மாக் கடையின் மேலாளர் பால்துரை களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கெங்கவல்லி அருகே குடிசையில் தீ: 20 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் எரிந்து நாசம்
கெங்கவல்லி அருகே குடிசையில் ஏற்பட்ட தீயில் 20 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் எரிந்து நாசமானது.
2. போதை மறுவாழ்வு மையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு
மாநிலம் முழுவதும் உள்ள போதை மறுவாழ்வு மையங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
3. மாவட்டத்தில் உரிமம் இன்றி செயல்படும் டாஸ்மாக் பார்களால் அரசுக்கு வருமானம் இழப்பு பொதுமக்கள் குற்றச்சாட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் இன்றி செயல்படும் டாஸ்மாக் பார்களால் தமிழக அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டு உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
4. குழுமணி அருகே ஆலமரத்துக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள்
குழுமணி அருகே ஆலமரத்துக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. தக்கலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
தக்கலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.