மண்டபம் அருகே பாலத்தில் மோட்டார்சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியாயினர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் யூனியன், புதுமடம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுகைபு மகன் நாகூர் சுபையர் அலி (வயது 27). அதே ஊரைச்சேர்ந்தவர் இஸ்மாயில் மகன் தங்கதுரை (26). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் உச்சிப்புளியில் இருந்து புதுமடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அப்போது புதுமடம் அருகே திடீரென மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த நாகூர் சுபையர் அலிக்கு திருமணமாகி 4 மாதங்கள்தான் ஆகிறது. தங்கதுரைக்கு இன்னும் திருமணமாகவில்லை. விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அர்லிங்டோன் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த அஜய்குமார் கோயல்முடி (வயது 23) மற்றும் தேஜா கவுசிக் (22) ஆகிய இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தனர்.