மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் அருகே, குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்த தம்பதி - மனைவி சாவு; கணவருக்கு தீவிர சிகிச்சை + "||" + Couple drinking poison on family issues Wife death; Husband in intensive care

கொடைக்கானல் அருகே, குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்த தம்பதி - மனைவி சாவு; கணவருக்கு தீவிர சிகிச்சை

கொடைக்கானல் அருகே, குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்த தம்பதி - மனைவி சாவு; கணவருக்கு தீவிர சிகிச்சை
கொடைக்கானல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதி விஷம் குடித்தனர். இதில் மனைவி இறந்தநிலையில் கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல்,

கொடைக்கானல் தாலுகா கவுஞ்சி மொழிகாடு கிராமத்தை சேர்ந்தவர் விஜய குமார் (வயது 42). விவசாயி. இவரது மனைவி மலர்ஜோதி (36). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மன முடைந்த விஜயகுமார் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மலர்ஜோதியும் மீதமுள்ள பூச்சி மருந்தை குடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த 2 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள், மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்ஜோதி பரிதாபமாக இறந்தார்.

தொடர்ந்து விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. குடும்ப பிரச்சினையில், 2 குழந்தைகளுக்கு உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து மெக்கானிக் தற்கொலை முயற்சி
விழுப்புரம் அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுக்கு உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து மெக்கானிக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. சின்னமனூர் அருகே, குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை
சின்னமனூர் அருகே குடும்ப பிரச்சினையில் அரளி விதையை அரைத்து குடித்து தம்பதி தற்கொலை செய்தனர்.
3. குடும்ப பிரச்சினையில் தொழிலாளி குத்திக்கொலை; உறவினர் கைது
மேலூர் அருகே குடும்ப பிரச்சினையில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உறவினரை போலீசார் கைது செய்தனர்.