மின்சார ரெயிலில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தை வீசிச்சென்றது யார்?


மின்சார ரெயிலில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தை வீசிச்சென்றது யார்?
x
தினத்தந்தி 1 Nov 2019 4:30 AM IST (Updated: 1 Nov 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மின்சார ரெயிலில் கட்டை பையில் துணியால் சுற்றப்பட்டு பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை அனாதையாக கிடந்தது. அந்த குழந்தையை வீசி சென்றது யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னை கடற்கரையில் இருந்து செங்ல்பட்டு ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்த மின்சார ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கட்டை பையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் கேட்பாரற்று இருந்தது. குழந்தையை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு சென்ற ரெயில்வே போலீசார் மற்றும் செங்கல்பட்டு டவுன் போலீசார் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வீசி சென்றவர்கள் யார்?

அங்கு குழந்தையின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு குழந்தைக்கு தேவையானவை வழங்கப்பட்டு வருகிறது. ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

குழந்தையை விட்டு சென்றவர்கள் யார்? பெற்றோர்களே வீசி சென்றனரா? அல்லது அதிகாலையில் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story