நாமக்கல்லில், முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் - கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது


நாமக்கல்லில், முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் - கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 2 Nov 2019 3:45 AM IST (Updated: 1 Nov 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதையடுத்து அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டார்.

மேலும் ஒவ்வொரு மனுக்கள் மீதும் எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நலத்துறை உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் கலந்து கொண்டனர். 

Next Story