மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; என்ஜினீயர் பலி + "||" + motor cycle Truck collision Engineer kills

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; என்ஜினீயர் பலி

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; என்ஜினீயர் பலி
மோட்டார் சைக்கிள் - லாரி மோதியதில் என்ஜினீயர் பலியானார்.
படப்பை,

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் குகன் (வயது 30). சென்னை ஜமீன் பல்லாவரம் நடேசன் சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாதன் (வயது 34). என்ஜினீயர்கள். இவர்கள் இருவரும் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.


நேற்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று படப்பையை அடுத்த பூந்தண்டலத்தில் அமைந்துள்ள வீட்டு மனை பிரிவுகளை பார்த்துவிட்டு மேலாத்தூர் வழியாக தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். எருமையூர் தர்காஸ் அருகே உள்ள கல்குவாரியில் இருந்து வந்த லாரி சாலையில் திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் குகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விஸ்வநாதனை சோமங்கலம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இறந்த குகனுக்கு வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; வாலிபர் பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. குன்றத்தூரில் மொபட்- லாரி மோதல்; பள்ளி மாணவி பலி
குன்றத்தூரில் மொபட்- லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி பரிதாபமாக பலியானார்.
3. திருவள்ளூர் அருகே வேன்-லாரி மோதல்; 18 பெண்கள் காயம் டிரைவர்கள் தப்பி ஓட்டம்
திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி வேன், லாரி நேருக்கு நேர் மோதியதில் 18 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்துக்கு காரணமான வேன் மற்றும் லாரி டிரைவர்கள் தப்பி ஓடினர்.
4. கூடலூரில், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி சாவு - மற்றொருவர் படுகாயம்
கூடலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
5. ஆறுமுகநேரி அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் பரிதாப சாவு
ஆறுமுகநேரி அருகே தசரா விழாவுக்கு மாலை அணிய சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.