மாவட்ட செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது + "||" + Two persons arrested for hunting wildlife near Thenkanikottai

தேன்கனிக்கோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பேவநத்தம் வனப்பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வனத்துறையினர் பேவநத்தம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த பகுதியில் ஒருவர் வலைகளுடன் சுற்றி கொண்டிருந்தார். அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் மாகடி கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 35) என்பதும், முயல் வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் மஞ்சுநாத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

உடும்பு கறி

அதே போல உரிகம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஒக்கமடுகு பகுதியில் வனச்சரகர் வெங்கடாசலம் தலைமையில் வனக்காப்பாளர் பிரித்திவிராஜ் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் ஒருவர் உடும்பை வேட்டையாடி அதன் கறியை கொண்டு வந்து கொண்டிருந்தார்.

அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் அஞ்செட்டி அருகே உள்ள ஒண்டூர் கிராமத்தை சேர்ந்த சோமா (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
2. கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்த 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்த 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சேலம் அம்மாபேட்டையில் மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோவில் அகற்றம் எதிர்ப்பு தெரிவித்த 32 பெண்கள் கைது
சேலம் அம்மாபேட்டையில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 32 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
4. பெண்களிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
திருச்சியில் பெண்களிடம் சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.