உலக சிக்கன நாளையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்


உலக சிக்கன நாளையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 7 Nov 2019 10:30 PM GMT (Updated: 7 Nov 2019 8:52 PM GMT)

உலக சிக்கன நாளையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் உலக சிக்கன நாளையொட்டி மாவட்ட அளவில் நடந்த பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, நடன போட்டி, நாடக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டில் சிறு சேமிப்பில் மாவட்ட அளவிலான மகளிர் முகவர்கள், நிலை முகவர்கள் வட்டார அளவிலும், நகராட்சி அலுவலகம் உள்ள முகவர்கள் சிறப்பாக பணியாற்றி ரூ. 350 கோடியே 22 லட்சத்து 7 ஆயிரத்து 730 என்ற இலக்கை எட்டியுள்ளனர். கடுமையாக உழைத்து சிறுசேமிப்பில் சிறந்து விளங்கும் முகவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துவதுடன், கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும். சிறுசேமிப்பு முகவர்கள் சிறுசேமிப்பில் மாவட்டம் முதலிடம் பெறும் வகையில் கூடுதலாக பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், மாவட்ட அளவிலான முகவர்கள், நிலை முகவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. ஆயிரமும், அதே போல் வட்டார, நகராட்சி அளவில் சிறந்து விளங்கி முதல் மூன்று இடங்களை பிடித்த முகவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்பில் காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) சாமிவேல், மாவட்ட சேமிப்பு அலுவலர் சண்முகம், தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலக உதவியாளர், சிறுசேமிப்பு அலுவலக பணியாளர்கள் நாராயணராவ், ரெஜினா, அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story