மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 35 தாசில்தார்கள் இடமாற்றம் - கலெக்டர் ‌ஷில்பா அதிரடி + "||" + In Tirunelveli district 35 Transfer of Dasildars Collector Shilpa Action

நெல்லை மாவட்டத்தில் 35 தாசில்தார்கள் இடமாற்றம் - கலெக்டர் ‌ஷில்பா அதிரடி

நெல்லை மாவட்டத்தில் 35 தாசில்தார்கள் இடமாற்றம் - கலெக்டர் ‌ஷில்பா அதிரடி
நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 35 தாசில்தார்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் பத்மசெல்வகுமாரி, நெல்லை உதவி ஆணையாளர் (கலால்) அலுவலக மேலாளராகவும், நெல்லை உதவி ஆணையாளர் (கலால்) அலுவலக மேலாளர் இந்திரா காந்தி நெல்லை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலக கல்வி உதவி தொகை தனி தாசில்தாராகவும், திசையன்விளை தாசில்தார் ஆவுடைநாயகம் நெல்லை தனி தாசில்தாராகவும், நெல்லை தனி தாசில்தார் கணேசன், நெல்லை தனி துணை கலெக்டர் (முத்திரை) தனி தாசில்தாராகவும், அந்த பதவியில் இருந்த பார்க்கவி தங்கம் சேரன்மாதேவி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேரன்மாதேவி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கட்ராமன், அம்பை தனி தாசில்தாராகவும் (குடிமை பொருள் வழங்கல்), சேரன்மாதேவி கோட்ட கலால் அலுவலர் இருதயராஜ், நெல்லை துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், அந்த பணியில் இருந்த ராஜூ சங்கரன்கோவில் தனி தாசில்தாராகவும் (ஆதி திராவிடர் நலம்), அந்த பதவியில் இருந்த செல்வநாயகம், புளியங்குடி அலகு-1 நகர நிலவரி திட்ட தனி தாசில்தாராகவும், அந்த பதவியில் இருந்த ஆதி நாராயணன் ராதாபுரம் தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்) இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராதாபுரம் தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜசேகரன், நெல்லை டாஸ்மாக் கலால் மேற்பார்வையாளராகவும், அந்த பதவியில் இருந்த முகமது யூசுப் சிவகிரி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீரகேரளம்புதூர் தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோமதி சங்கரநாராயணன், செங்கோட்டை தனி தாசில்தாராகவும் (குடிமை பொருள் வழங்கல்), அந்த பதவியில் இருந்த ஹென்றி பீட்டர் தென்காசி புதிய மாவட்ட தனி அலுவலக தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

சிவகிரி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) பட்டமுத்து, திசையன்விளை தாசில்தாராகவும், நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலக தனி தாசில்தாராகவும், பிரின்சிலின் அருள் செல்வி நாங்குநேரி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), அந்த பதவியில் இருந்த சுப்புராயலு ஆச்சாரி, நெல்லை டாஸ்மாக் உதவி மேலாளராகவும், அந்த பதவியில் இருந்த பத்மநாபன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அம்பை தனி தாசில்தார் (குடிமை பொருள் வழங்கல்) செல்வின் கலை செல்வி பாளையங்கோட்டை தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), அந்த பதவியில் இருந்த லதா சேரன்மாதேவி கோட்ட கலால் அலுவலராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வீரகேரளம்புதூர் தனி துணை தாசில்தார் (தேர்தல்) பு‌‌ஷ்பராணி, மானூர் தனி துணை தாசில்தாராகவும், தென்காசி தலைமையிடத்து துணை தாசில்தார் சுடலைமணி வீரகேரளம்புதூர் துணை தாசில்தாராகவும் (தேர்தல்), நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தனி துணை தாசில்தார் (பறக்கும் படை) கணபதி, தென்காசி தனி துணை தாசில்தாராகவும் (தேர்தல்), சேரன்மாதேவி முதுநிலை வருவாய் ஆய்வாளர் நக்கீரன், நாங்குநேரி வட்ட வழங்கல் அலுவலராகவும், நெல்லை கோட்ட கலால் அலுவலக தனி வருவாய் ஆய்வாளர் வீரமணி, நாங்குநேரி மண்டல துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மானூர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் மைதீன் பாட்‌ஷா, தென்காசி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அம்பை முதுநிலை வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி, செங்கோட்டை மண்டல துணை தாசில்தாராகவும், அம்பை முதுநிலை வருவாய் ஆய்வாளர் சிவன்பெருமாள், வீரகேரளம்புதூர் மண்டல துணை தாசில்தாராகவும், சிவகிரி அலகு-6 தனி வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி, சிவகிரி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், நெல்லை முதுநிலை வருவாய் ஆய்வாளர் வில்லுடையார், நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமை உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சேரன்மாதேவி முதுநிலை வருவாய் ஆய்வாளர் சங்கரநாராயணன், அம்பை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், பாளையங்கோட்டை நதிநீர் இணைப்பு திட்டம் அலகு-1 தனி வருவாய் ஆய்வாளர் மீனா, நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமை உதவியாளராகவும், நெல்லை உதவி ஆணையாளர் (கலால்) அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜதுரை, நெல்லை மாவட்ட தனி துணை தாசில்தாராகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரத்னபிரபா, திருவேங்கடம் வட்ட வழங்கல் அலுவலராகவும், நாங்குநேரி மண்டல துணை தாசில்தார் குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தனி துணை தாசில்தாராகவும் (பறக்கும் படை) நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் சென்னீஸ் மைதானத்தில் செயல்பட்ட தற்காலிக உழவர் சந்தை மீண்டும் இடமாற்றம்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தற்காலிக சூரமங்கலம் உழவர் சந்தை 3 ரோடு அருகே சென்னீஸ் மைதானத்திற்கு (ஜவகர் மில் திடல்) இடமாற்றம் செய்யப்பட்டது.
2. கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி: சிவன் கோவில் நவீன முறையில் இடமாற்றம்
கிழக்குகடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி அப்பகுதியில் இருந்த சிவன் கோவில் ஜாக்கிகள் மூலம் நவீன முறையில் இடமாற்றம் செய்யப்படுகிறது.
3. டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததற்காக அரசு செயலாளர் இடமாற்றம் ; ஸ்டாலின் குற்றச்சாட்டு
டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததற்காக தமிழக அரசு செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
4. கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவம் அதிகரிப்பு: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேர் பணி இடமாற்றம்
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவம் அதிகரிப்பு காரணமாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேரை பணி இடமாற்றம் செய்து கமி‌‌ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.