பா.ஜனதாவுடன் கூட்டணியை முறிக்க விரும்பவில்லை - உத்தவ் தாக்கரே பேட்டி


பா.ஜனதாவுடன் கூட்டணியை முறிக்க விரும்பவில்லை - உத்தவ் தாக்கரே பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2019 5:30 AM IST (Updated: 8 Nov 2019 5:30 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா, சிவசேனா இடையே குழப்பம் நீடித்து வரும் நிலையில், நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மாதோஸ்ரீ இல்லத்தில் சிவசேனா எம்.எல்.ஏ.களை அழைத்து பேசினார்.

மும்பை,

கூட்டத்தில் ஆட்சி அமைக்கும் பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பின் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் கூட்டணியை முறித்து கொள்ள வேண்டும் என எண்ணவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இரண்டு கட்சிகளுக்கும் இடையே என்ன பேசி முடிவு செய்யப்பட்டதோ (ஆட்சியில் சமபங்கு) அதை செயல்படுத்த வேண்டும் என்பதை தான் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story