பாலக்காடு துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுக்காயங்களுடன் தப்பிய மாவோயிஸ்டு கைது


பாலக்காடு துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுக்காயங்களுடன் தப்பிய மாவோயிஸ்டு கைது
x
தினத்தந்தி 10 Nov 2019 5:00 AM IST (Updated: 10 Nov 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

பாலக்காடு துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுக்காயங்களுடன்தப்பியமாவோயிஸ்டை தமிழக அதிரடிப்படை போலீசார் கோவை அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கோவை,

தமிழக-கேரள எல்லை அருகே உள்ளஅட்டப்பாடிமஞ்சக்கண்டிவனப்பகுதியில்கடந்த மாதம்கேரளாவை சேர்ந்ததண்டர்போல்டுஎன்றுஅழைக்கப்படும்அதிரடிப்படையினருக்கும்,மாவோயிஸ்டுகளுக்கும்இடையே கடும்துப்பாக்கி சண்டைநடந்தது. இதில்மாவோயிஸ்டுதலைவனான சேலம் மாவட்டம்தீவட்டிபட்டிஅருகே உள்ளராமமூர்த்திநகரை சேர்ந்த மணி என்கிறமணிவாசகம், தமிழகத்தை சேர்ந்தகார்த்திக்மற்றும்சுரேஷ், ஸ்ரீமதி ஆகிய 4 பேர்சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குண்டுக்காயங்களுடன்தப்பி ஓடியசோனா, லட்சுமி,சந்துருஎன்கிறதீபக் ஆகிய3 பேரைஅதிரடிப்படைவீரர்களும், தமிழகத்தை சேர்ந்தஅதிரடிப்படைவீரர்களும் தேடி வந்தனர். அவர்கள்சிகிச்சைக்காக தமிழகத்துக்குள்வந்தார்களா?என்பது குறித்துநக்சலைட்டுதடுப்பு பிரிவுபோலீசாரும்அதிரடி சோதனைநடத்தினார்கள். அத்துடன் தேடுதல் வேட்டையும் நடந்து வந்தது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ளதமிழக சிறப்புஅதிரடிப்படைபோலீஸ்சூப்பிரண்டுமூர்த்தி தலைமையிலானபோலீசார்நேற்றுஅதிகாலை கோவைஆனைக்கட்டிஅருகே உள்ளசேம்புக்கரை,தூமனூர்மற்றும் அதைச்சுற்றி உள்ளவனப்பகுதியில்துப்பாக்கிகளுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அவர்கள்சேம்புக்கரையைதாண்டி அடர்ந்தவனப்பகுதியில்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது,அந்தப்பகுதியைசேர்ந்த ஆதிவாசி மக்களிடம் யாராவது மர்ம ஆசாமிகளின் நடமாட்டம் இருந்ததா? என்று கேட்டனர். அப்போது அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்புதான் 3பேர் துப்பாக்கிகளுடன்இங்குவந்துவிட்டு சென்றதாக தெரிவித்தனர். இதனால் உஷாரானபோலீசார்தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்கள்.

காலை 7.30மணியளவில்தமிழக- கேரள எல்லையானமூலக்கண்என்ற இடத்தின் அருகேபோலீசார்சென்றனர். அப்போது திடீரென்று செடிகளுக்குள் மறைந்து இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். உடனே போலீசார்அவர்களைதுரத்திச்சென்றனர். அதில் ஒருவரைபோலீசார்துப்பாக்கி முனையில்மடக்கி பிடித்துவிசாரித்தனர்.

இதில், அவர் கேரளஅதிரடிப்படைபோலீசாருக்கும்,மாவோயிஸ்டுகளுக்கும்இடையே நடந்ததுப்பாக்கி சூட்டில்குண்டுக்காயம்அடைந்தமாவோயிஸ்டுசந்துருஎன்கிறதீபக் என்பதுதெரியவந்தது. இவர்மாவோயிஸ்டுகளுக்குதுப்பாக்கி பயிற்சி கொடுக்கும்தலைவன் என்றாலும், தற்போது அவருடைய உடலில்குண்டுகாயங்கள்இருந்ததால்போலீசார்மடக்கி பிடித்துவிட்டனர். பின்னர்போலீசார்அவரை கைதுசெய்து, பலத்த பாதுகாப்புடன் அடர்ந்தவனப்பகுதியைவிட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தமிழக-கேரள போலீஸ்உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.குண்டு காயங்களுடன்பாதிக்கப்பட்டுஇருந்ததால்மாவோயிஸ்டுசந்துருஎன்கிறதீபக்கைபோலீசார்கோவை அருகே உள்ளநெ24வீரபாண்டியில்உள்ள துணைசுகாதாரநிலையத்தில்சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்குமுதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது.அந்த சுகாதாரநிலையம் மலையடிவாரத்தில்இருப்பதால்அங்கு துப்பாக்கி ஏந்தியபோலீசாரும்குவிக்கப்பட்டனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவைஅரசு ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டார். அங்குஅவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது. இதனால் அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கோவையை சேர்ந்தஉயர் போலீஸ் அதிகாரிகள்கூறியதாவது:-

தற்போது கைது செய்யப்பட்டமாவோயிஸ்டுதீபக்,சத்தீஷ்கார்மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 2016-ம்ஆண்டு கேரளவனப்பகுதிக்குவந்த இவர்கமாண்டோபயிற்சி பெற்றார். சகமாவோயிஸ்டுகளுக்குஏ.கே. 47, 303ரக துப்பாக்கிகளைஎப்படி கையாள வேண்டும், கண்ணி வெடிகளை கையாள்வது, ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்துக்குஎளிதாக தாவுவதுஎப்படி என்பது உள்ளிட்ட பல்வேறுபயிற்சிகளை கொடுத்து உள்ளார்.அத்துடன்மாவோயிஸ்டுகளுக்குஆயுத பயிற்சிகொடுக்கும்பிரிவுக்கு தலைவனாகவும்பணியாற்றி வந்துள்ளார். இவர் கொடுத்த பயிற்சிகளைவீடியோகேமராவில்பதிவு செய்து அதை மடிக்கணினியிலும்பதிவேற்றம்செய்து வைத்துள்ளார். இவர் நக்சலைட்டுகளிடம் பயிற்சிபெற்றதாகவும்கூறப்படுகிறது.

தீபக்குடன்இருந்த பெண்மாவோயிஸ்டுகளானலட்சுமி,சோனாஆகியோருக்குசிறியகாயம் தான் உள்ளது. எனவே அவர்கள்எளிதில்தப்பிச்சென்றுவிட்டனர்.தீபக் மீதுதமிழகத்தில் வழக்குஇருக்கிறதா?என்பது குறித்துவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில்இருக்கிறது.

எனவேஅவரை தமிழகசிறையில்அடைப்பதா? அல்லதுகேரள போலீசில்ஒப்படைப்பதாஎன்பது குறித்துஉயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தப்பி ஓடிய பெண்மாவோயிஸ்டுகள்கேரள மாநிலம்சோலையூர்பகுதிக்கு தப்பி சென்றுஇருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இதுகுறித்து கேரள போலீஸ்உயர்அதிகாரிகளுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அங்குதீவிர சோதனை நடத்திவருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story