மாவட்ட செய்திகள்

கோவையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி மூதாட்டி உள்பட 2 பேர் சாவு + "||" + Awful in Coimbatore Electricity struck 2 people die, including the elder

கோவையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி மூதாட்டி உள்பட 2 பேர் சாவு

கோவையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி மூதாட்டி உள்பட 2 பேர் சாவு
கோவையில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வடவள்ளி, 

கோவை சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 65). இவருடைய கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கண்ணம்மாளுக்கு ஒரு மகன் உள்ளார். கண்ணம்மாள் நேற்றுக்காலை அங்குள்ள தோட்டத்துக்கு சென்று மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்ச் போட்டார். ஆனால் மின் மோட்டார் இயங்கவில்லை.

இதனால் அவர் மின் ஒயரை கத்தியால் சீவி உள்ளார். அப்போது திடீரெனறு அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் அலறியபடி கீழே விழுந்தார். அவரது சத்தம் கேட்டு தோட்டத்தில் வேலை செய்த அதேப்பகுதியை சேர்ந்த சுரே‌‌ஷ் (24) என்பவர் ஓடி வந்து கண்ணம்மாளை மீட்க முயன்று உள்ளார். இதில் அவரையும் மின்சாரம் தாக்கியது.

இதில் கண்ணம்மாள், சுரேஷ் ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்த தகவலின் பேரில் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், மின்சாரம் தாக்கி இறந்த கண்ணம்மாள், சுரே‌‌ஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹிட்லர் வளர்த்த முதலை சாவு
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.
3. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: தீக்காயமடைந்த தொழிலாளி சாவு
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து தீப் பிடித்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
4. கோவையில் பரிதாபம் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு மேலும் 2 பேருக்கு சிகிச்சை
கோவையில் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்
நாகர்கோவிலில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவத்தில் படுகாயம் அடைந்த கணவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.