மாவட்ட செய்திகள்

பாபநாசம் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது + "||" + Near Papanasam,lass raped: Pokco law student arrested at the Polytechnic College

பாபநாசம் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது

பாபநாசம் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது
பாபநாசம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த 5 வயதான சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். சிறுமி யு.கே.ஜி. படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது பாபநாசம் அருகே செருமாக்கநல்லூரை சேர்ந்த அருண்குமார்(வயது21) என்பவர், அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அங்கிருந்து அழுது கொண்டே வந்த சிறுமி, தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் விமலாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அருண்குமாரை கைது செய்து தஞ்சை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அருண்குமாரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள அருண்குமார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. காட்டுமன்னார்கோவில் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் - காதலன் உள்பட 3 பேர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. வேதாரண்யம் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
வேதாரண்யம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
3. சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
4. வீட்டில் தனியாக இருந்த, சிறுமியை பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவருக்கு 7 ஆண்டு சிறை
வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
5. சிறுமியை பலாத்காரம் செய்தவரை கைது செய்யக்கோரி, உறவினர்கள்-பல்வேறு அமைப்பினர் சாலைமறியல்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.