மாவட்ட செய்திகள்

ராதாபுரம் அருகே, இளம்பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை + "||" + Near Radapuram young woman Suicide by drinking poison Assistant Collector Inquiry

ராதாபுரம் அருகே, இளம்பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

ராதாபுரம் அருகே, இளம்பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
ராதாபுரம் அருகே இளம்பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
ராதாபுரம், 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கால்கரை யாதவர் தெருவை சேர்ந்தவர் மந்திரம் (வயது 25). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (21). மந்திரத்திற்கு மது குடிக்கும் பழக்கம் உண்டாம். இதனால் இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து, முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்றும் மந்திரம், முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அவர் வெளியே சென்று விட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட முத்துலட்சுமி வீட்டில் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மந்திரத்திற்கும், முத்துலட்சுமிக்கும் திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆவதால், இச்சம்பவம் தொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா.
2. இளம்பெண்ணுக்கு செல்போனில் தொல்லை: தட்டிக்கேட்ட பூசாரிக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
இளம்பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட பூசாரியை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. ஊரடங்கு உத்தரவால் சிக்க மாட்டோம் என நினைத்து இளம்பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர்கள் - பொதுமக்கள் மடக்கிப்பிடித்து அடி-உதை
ஊரடங்கு உத்தரவால் சிக்க மாட்டோம் என நினைத்து இளம்பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
4. நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்
நாகர்கோவிலில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவத்தில் படுகாயம் அடைந்த கணவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
5. சிலிண்டர் வெடித்து இளம்பெண் பலி காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
ஈரோடு அருகே சிலிண்டர் வெடித்து இளம்பெண் இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம் அடைந்தார்.