வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயனற்றுகிடக்கும் ‘நம்ம டாய்லெட்’


வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயனற்றுகிடக்கும் ‘நம்ம டாய்லெட்’
x
தினத்தந்தி 10 Nov 2019 10:00 PM GMT (Updated: 10 Nov 2019 5:57 PM GMT)

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட ‘நம்ம டாய்லெட்’ பயனற்று கிடக்கிறது.

வேலூர், 

வேலூர் மாநகராட்சி, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.1,000 கோடியில் பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளது. அதில் சில பணிகள் நடைபெற்று வருகிறது. வேலூர் மாநகரம் சென்னைக்கும், பெங்களூருவுக்கும் இடையே அமைந்துள்ளதால் தினமும் வேலூர் வழியாக பெங்களூரு மற்றும் சென்னை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

மேலும் ஆன்மிகம், கல்விக்காகவும், சுற்றுலாவாகவும் வேலூருக்கு, வெளிமாநிலத்தினர் வருகையும் அதிகமாக இருக்கிறது. இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். பயணிகளின் வசதிக்காக பஸ் நிலையத்தில் பல்வேறு இடங்களில் பொது கழிப்பிடம், கட்டண கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. ஆனாலும் சில கழிவறைகள் சரியான பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் பயணிகள் அங்கு செல்வதில்லை.

இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் ‘நம்ம டாய்லெட்’ கொண்டுவரப்பட்டது. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் ‘நம்ம டாய்லெட்’ கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் 4 டாய்லெட்டுகள் வைக்கப்பட்டது.

இவை கொண்டுவந்து வைக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் அதை பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் தற்போது 4 நம்ம டாய்லெட்டுகளும் புதர் மண்டி பயனற்று கிடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story