ஜிஞ்சுப்பள்ளி, பந்தாரப்பள்ளியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி - செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ஜிஞ்சுப்பள்ளி, பந்தாரப்பள்ளியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி - செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Nov 2019 4:00 AM IST (Updated: 14 Nov 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஜிஞ்சுப்பள்ளி, பந்தாரப்பள்ளியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட கிழக்கு ஒன்றிய ஜிஞ்சுப்பள்ளி மற்றும் பந்தாரப்பள்ளி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 8 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் கிரு‌‌ஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் பங்கேற்று, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதில், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், தொ.மு.ச. கிரு‌‌ஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஜினிசெல்வம், நிர்வாகிகள் குமரேசன், மகேந்திரன், கருணாகரன், சவுந்தர்ராஜன், சீனிவாசன், கோவிந்தசாமி, வேலாயுதம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story