மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே, முன்விரோதத்தில் மோதல்; 7 பேர் மீது வழக்கு + "||" + Near Tiruvallur, clash in protests; Case against 7 people

திருவள்ளூர் அருகே, முன்விரோதத்தில் மோதல்; 7 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே, முன்விரோதத்தில் மோதல்; 7 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகேயுள்ள வயலாநல்லூரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காஞ்சனா (வயது 45). இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த கோலப்பஞ்சேரியை சேர்ந்த வரதராஜ் என்கின்ற ராஜேஷ், விக்கி, பொன்னியின்செல்வன் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு காஞ்சனாவை தகாத வார்த்தையால் பேசி கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கியுள்ளனர்.

பதிலுக்கு காஞ்சனா தரப்பில் அவரது உறவினர்களான திலீப்குமார், மதி, பொன்னி, குமார் ஆகியோர் ராஜேஷ் மற்றும் விக்கி ஆகியோரை அடித்து உதைத்து கத்தியால் குத்தியுள்ளனர்.

இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த மேற்கண்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு.
2. நாகையில், 144 தடை உத்தரவை மீறிய 169 பேர் மீது வழக்கு - 150 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
நாகையில் 144 தடை உத்தரவை மீறிய 169 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 150 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
3. தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு
தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு
4. போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு
போலி ஆவணங்களை தயாரித்து நில மோசடி செய்ததாக 2 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. வேலூரில் 2 மணி நேரத்தில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத 692 பேர் மீது வழக்கு - சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் நடவடிக்கை
வேலூரில் 2 மணி நேரம் நடந்த சிறப்பு வாகன தணிக்கையில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத 692 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.