மாவட்ட செய்திகள்

7-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்புபால்தாக்கரே நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி + "||" + Commemoration of the 7th anniversary Leaders pay tribute to Balthakare memorial

7-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்புபால்தாக்கரே நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

7-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்புபால்தாக்கரே நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
மும்பை,

மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.

பால்தாக்கரே நினைவு நாள்

சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரேயின் 7-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் உள்ள பால் தாக்கரேயின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி பால் தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காலை முதலே அதிகளவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

நினைவிடத்தில் அஞ்சலி

இந்தநிலையில் பால்தாக்கரே நினைவிடத்தில் அவரது மகனும் சிவசேனா தலை வருமான உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, அவரது சகோதரர் தேஜஸ் தாக்கரே, முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி, சஞ்சய் ராவத் எம்.பி. உள்ளிட்ட சிவசேனா மூத்த தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தாராவி கவுன்சிலர் மாரியம்மாள் முத்துராமலிங் கம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மந்திரிகள் வினோத் தாவ்டே, பங்கஜா முண்டே, தேசியவாத காங்கிரஸ் பிரமுகர்கள் சகன் புஜ்பால், சஞ்சய் பாட்டீல் ஆகியோரும் பால் தாக்கரே உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.