தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளாட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளாட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2019 10:15 PM GMT (Updated: 18 Nov 2019 9:59 PM GMT)

தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கலாவதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குட்டியப்பன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் செல்வம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில செயலாளர் நாகராஜன், நிர்வாகி வெங்கட்ராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், திடக் கழிவு மேலாண்மை திட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி நாள் ஒன்றுக்கு ரூ.320 ஊதியம் வழங்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான உள்ளாட்சி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story