சின்ன வேடம்பட்டியில் மண்ரோடாக மாறிய தார்சாலை உடனடியாக சீரமைக்க கோரிக்கை


சின்ன வேடம்பட்டியில் மண்ரோடாக மாறிய தார்சாலை உடனடியாக சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2019 10:30 PM GMT (Updated: 19 Nov 2019 7:37 PM GMT)

சின்னவேடம்பட்டியில்,மண்ரோடாகமாறியதார்சாலையைஉடனடியாக சீரமைக்கவேண்டும் என்றுஅப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கணபதி,

கோவைஅத்திப்பாளையம்பிரிவில் இருந்துசின்னவேடம்பட்டிசெல்லும் சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும்ஆயிரத்திற்கும்மேற்பட்ட தொழிலாளர்கள்இந்த சாலைவழியாக சென்றுவருகின்றனர். மேலும்அந்த பகுதியில்வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிமாணவ-மாணவிகள் அனைவரும் அதே சாலைவழியாகத்தான்தினமும் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில்சின்னவேடம்பட்டிசாலை தற்போதுகுண்டும், குழியுமாக மாறிமண்ரோடாககாட்சி அளிக்கிறது. இந்த சாலையைசீரமைக்கக்கோரிஅப்பகுதிமக்கள் கடந்த 5ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்தும் எந்தவித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. இதனால் அந்தவழியாக செல்லும்வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- அத்திப்பாளையம் பிரிவில் இருந்து சின்னவேடம்பட்டி செல்லும் சாலை, மழைக்காலங்களில் வயல்வெளியைபோல் சேறும்சகதியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது அவ்வப்போது வடகிழக்கு பருவமழைபெய்து வருவதால் அந்த சாலைவழியாக இருசக்கரவாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும்அந்த பகுதியில்உள்ளதொழிற்சாலைகளுக்குவரும் கனரக வாகனங்கள் கூட திக்குமுக்காடித்தான் செல்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட தொழிற்சாலைக்குஅதிகாலை வந்த ஒருலாரி சகதியில்சிக்கி கொண்டது. அந்த லாரியை டிராக்டர் மூலம்இரும்பு சங்கிலியால்கட்டிஇழுத்து பார்த்தனர். ஆனால்முடியாததால், மாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த லாரியை மீட்டனர். இதனால் மாலை வரைஅந்த சாலையில்எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

வாகனங்கள் அடிக்கடி சகதியில்சிக்கிக்கொள்வதால்அப்பகுதியில்பல மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப்படுகிறது. இதனால் தொழிற்சாலைக்குமூலப்பொருட்களைசரியான நேரத்தில் கொண்டு செல்லமுடியாமலும், நாங்கள் குறித்த நேரத்திற்குஅலுவலகத்திற்கு செல்லமுடியாமலும்அவதிப்படுகிறோம்.

விபத்து காலங்களில்ஆம்புலன்ஸ்உள்ளிட்ட வாகனங்கள் கூடஇந்த சாலையில்செல்ல முடிவதில்லை. எனவேஇந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story