பள்ளிப்பட்டு அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி


பள்ளிப்பட்டு அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 Nov 2019 4:00 AM IST (Updated: 20 Nov 2019 11:22 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே பஸ், மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கோணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் நேற்று காலை தனது உறவினர் ரவிக்குமார் (50) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.

வழியில் குமாரரஜுப்பேட்டை கிராமத்தில் பெருமாநல்லூர் சாலை சந்திப்பில் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து வேலூருக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்ற அரசு பஸ் மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

2 பேர் சாவு

இதில் படுகாயம் அடைந்த ரவிக்குமார் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கார்த்திக்கை சிகிச்சைக்காக கோனேட்டம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் சிவா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story