மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியை கலெக்டர் ஆய்வு


மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Nov 2019 10:45 PM GMT (Updated: 20 Nov 2019 7:40 PM GMT)

மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

சேலம்,

மேச்சேரி எம்.காளிப்பட்டியில் உள்ள ஏரியில், மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதை மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ரூ. 565 கோடி மதிப்பீட்டில் மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி மற்றும் ஓமலூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறண்ட 100 ஏரிகளில் நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் குறித்த முதற்கட்ட ஆய்வு நடைபெற்று வருகின்றது.

விவசாய பணி

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டிய பிறகு மழைக்கால உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகின்றது. அவ்வாறு திறந்து விடப்படும் மழைக்கால உபரி நீர் வீணாகச் சென்று கடலில் கலப்பதை தடுத்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவதற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது, என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story