தனி அமைச்சகம் கோரி மீனவ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தனி அமைச்சகம் கோரி மீனவ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:38 PM GMT (Updated: 21 Nov 2019 10:38 PM GMT)

தனி அமைச்சகம் கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மீனவ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை, 

உலக மீனவர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாடு மீனவ தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் மீனவர்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் சே.முருகானந்தம் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சின்னதம்பி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, மாநில செயலாளர் ஜி.மணியாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்த நிர்வாகிகள் கூறுகையில், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். கடற்கரையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கக் கூடாது. கடலோர மேலாண்மை மண்டல அறிவிப்பாணை 2019-ஐ திரும்ப பெற வேண்டும். மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மீன் விற்பனையாளர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்கிட வேண்டும்’ என்றனர்.

Next Story