பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாடியதாக தகவல் பரவியதால் பொதுமக்களிடையே பரபரப்பு


பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாடியதாக தகவல் பரவியதால் பொதுமக்களிடையே பரபரப்பு
x
தினத்தந்தி 24 Nov 2019 3:30 AM IST (Updated: 24 Nov 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாடியதாக தகவல் பரவியதால் பொதுமக்களிடையே பரபரப்பு.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்்கோடு அருகே உள்ள மாக்கன்கொட்டாய் பகுதியில் ஏரி உள்ளது. இந்த பகுதிக்கு நேற்று பொதுமக்கள் ஆடுகள் மேய்க்க சென்றனர். அப்போது சிறுத்தை நடமாடியது போன்று கால் தடம் பதிந்து இருந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் செல்வம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ஏரிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஏரியில் பதிந்து இருந்தது நாய் கால் தடம் என தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். ஏரியில் சிறுத்தை நடமாடியதாக தகவல் பரவியதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Next Story