சாத்தூர் நகராட்சியில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் கிடைக்க ஏற்பாடு - ராஜவர்மன் எம்.எல்.ஏ. உறுதி
சாத்தூர் நகராட்சி பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வினியோக பகுதிகளில் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் ஆய்வு செய்தார். போதிய குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
சாத்தூர்,
சாத்தூர் நகராட்சி பகுதி தென்வடல் புதுதெரு, பழைய படந்தால் ரோடு, கோர்ட்டு பின்புறம், நந்தவனபட்டி நடுத் தெரு மற்றும் 16, 18 ஆகிய வார்டுகளில் சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனிடம் மனு கொடுத்தனர்.
அதனைதொடர்ந்து நேற்று அவர் சாத்தூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் முத்து முன்னிலையில் சாத்தூர் நகர்பகுதியில் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது மக்களிடம் குடிநீர் சம்பந்தமான குறைகளை கேட்டார். பின்னர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்போதிய அளவில் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அவருடன் அ.தி.மு.க. மாநில பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், மாநில பொதுகுழு உறுப்பினர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் கிருஷ்ணன். நகர செயலாளர் வாசன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை மற்றும் அரசு அதிகாரிகள் சென்று இருந்தனர்.
Related Tags :
Next Story