தொடர்மழையால் அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர்மழையால் அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியதில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் மற்றும் மலையாளப்பட்டி பகுதியை சுற்றியுள்ள பச்சமலையில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கல்லாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பி வழிகிறது. மேலும் தற்போது பெரிய ஏரி நிரம்பி அருகிலுள்ள சித்தேரிக்கு நீர் செல்வதை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வரும் ஆண்டு முழுவதும் குடிநீர் பஞ்சம் இருக்காது என அரும்பாவூர் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story